ஒப்புதல் அளிக்கப்பட்ட உலகின் முதல் கொரோனா தடுப்பூசி: ரஷிய அதிபர் புதின் மகளுக்கு செலுத்தப்பட்டதாக தகவல்..!!

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின் மகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உலகில் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், ஒவ்வொரு நாடுகளும் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பகல் இரவாக பாடுபட்டு வருகின்றன.

தற்போது, இதுவரை உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7.37 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 7,37,863 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 20,236,931 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 13,092,792 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 64,558  பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை உலகின் முதன்முறையாக கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசி ரஷியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி எனது மகள் உடலில் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

பரிசோதனை முடிவில் இந்த தடுப்பூசி கொரோனா தொற்றுக்கு எதிராக நிலையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பூசிக்கு ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்ததை அடுத்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியை விரைவாக உருவாக்க ரஷ்யா தொடக்கத்தில் இருந்து முயற்சித்து வருகிறது.

Related Stories: