×

டாஸ்மாக் கடைகளில் டெபிட் , கிரெடிட் கார்டுகள் கொடுத்து மது வாங்கும் வசதி விரைவில் அறிமுகம்..!!

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் செலுத்தி மது வாங்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. அக்டோபர் மாதம் தொடக்கத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் டிஜிட்டல் முறையில் விற்பனை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக மேலாண்மை இயக்குனர் செல்வகுமார் நேற்றைய தினம் ஒரு செய்தி குறிப்பினை வெளியிட்டிருக்கிறார்.

தமிழகம் முழுவதும் சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மதுபான கடைகள் இருக்கிறது. அனைத்து மதுபான கடைகளிலும் மின்னணு விற்பனை இயந்திரங்கள் நிறுவுவதற்காக வங்கிகளில் ஒப்பந்த புள்ளி கோரப்பட்டிருக்கிறது. அதில் ஒருசில வங்கிகள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகளும் இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது.

இந்த மின்னணு ஒப்பனை புள்ளி அடிப்படையில் இறுதி செய்யப்பட்டதற்கு பிறகு வருகின்ற அக்டோபர் மாதம் தொடக்கத்தில் இந்த திட்டம் அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகளவு இருக்கிறது. இந்த திட்டத்தின் அடிப்படையில் மின்னணு விற்பனை இயந்திரங்கள் வாயிலாக டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்கக்கூடிய மதுபிரியர்கள் அதற்குரிய தொகையை டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள், கூகுள் பே மூலமாக செலுத்திவிட்டு மதுபானங்களை பெற்றுக்கொள்ளலாம் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகள் குறித்த ஒரு தீர்ப்பினை வெளியிட்டிருந்தது. அதில், டாஸ்மாக் மதுபான கடைகளில் மின்னணு விற்பனை இயந்திரங்கள் வாயிலாக விற்பனை தொகையை பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையிலேயே தற்போது இத்தகைய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

Tags : stores ,facility ,Tasmac , facility ,buy liquor, giving debit ,credit cards, Tasmac
× RELATED டாஸ்மாக் கடைகளில் 44% பீர் விற்பனை உயர்வு