சிகாகோ நகரில் பொதுமக்கள் - போலீசார் இடையே பயங்கர மோதல்!: 162 போலீசார் காயம்..100 பேர் கைது..!!

வாஷிங்டன்: அமெரிக்காவின் சிகாகோ நகரில் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 160 போலீசார் காயமடைந்துள்ளனர். இந்த போராட்டம் தொடர்பாக 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதுமே பரபரப்பு ஏற்பட்டது. சிகாகோ நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு ஆடம்பர வர்த்தக கட்டிடத்தில் ஏராளமானூர் கூடியிருந்தனர்.

அப்போது துப்பாக்கி வைத்திருந்த ஒரு நபரை போலீசார் சுட்டு பிடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசாரை சரமாரியாக தாக்க தொடங்கினர். இதனால் அந்த இடமே சண்டைக்களமானது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாக்குதல் நடத்தியதோடு மட்டுமின்றி கடைகளையும் சூறையாடினர். கடைகளில் இருந்து விலையுயர்ந்த பொருட்களையும் அவர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதனை தடுக்க போலீசார் துப்பாக்கிசூடு நடத்தியதாக தெரிகிறது. காயமடைந்த 162 போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதல் முடிவுக்கு வர சிலமணி நேரங்கள் ஆனது. ஏற்கனவே 2 மாதங்களுக்கு முன்பு மின்னபொலிஸ் என்ற இடத்தில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் போலீசாரால் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டார். இதற்கு நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, பொதுமக்களின் ஆக்ரோஷத்திற்கு ஜார்ஜ் பிளாய்ட் கொலையே காரணம் என்ற புகாரை சிகாகோ மேயர் லோரி மறுத்துள்ளார்.

Related Stories: