×

சென்னையில் கொரோனா பாதிப்பை குறைக்க 4 மண்டலங்களில் கூடுதல் பரிசோதனை!!!

சென்னை:  சென்னையில் கொரோனா பாதிப்பை குறைக்க 4 மண்டலங்களில் கூடுதலாக பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதங்களில் சென்னையில் கொரோனா தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்து சென்ற நிலையில், தற்போது தொற்றின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துள்ளது. குறிப்பாக வட சென்னையில்தான் கொரோனா தொற்றானது அதிகளவில் பரவி வந்தது. இதனையடுத்து வடசென்னையில் பல்வேறு தடுப்புகள் அமைத்து, பரிசோதனை முகாம்கள் அமைத்து தொற்றானது தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதற்கு மாறாக தற்போது சென்னை அம்பத்தூர் மண்டலத்தில் 1619 பேரும், அண்ணா நகர் மண்டலத்தில் 1214 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 1433 பேரும் மற்றும் வளசரவாக்கம் மண்டலத்தில் 781 பேரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறிப்பாக இந்த 4 மண்டலங்களில் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பதால், இந்த பகுதிகளில் கூடுதலாக கொரோனா தடுப்பு பரிசோதனை மையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தடுப்புகள் மற்றும் பரிசோதனை முகாம்கள் அமைப்பதன் மூலம் விரைவில் அப்பகுதிகளில் வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சென்னை மாநகராட்சியை பொறுத்தவரையில் தற்போது 13 ஆயிரத்திற்கும் மேலாக கொரோனா பரிசோதனையானது நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : zones ,Chennai , Additional testing, 4 zones, reduce corona impact ,Chennai
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...