×

ஆவின் தினக்கூலி தொழிலாளர்கள் 110 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு...!!

விழுப்புரம்:  தினக்கூலி தொழிலாளர்கள் 110 பேரை எந்த வித முன்னறிவிப்பும் இன்றி ஆவின் பால் நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது. இதனையடுத்து விழுப்புரம் மாவட்டம் மேட்டுக்குப்பத்தில் தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேட்டுக்குப்பம், தொண்டசமுத்திரம், பூசாரி பாளையம், ஆமூர் உள்ளிட்ட 7 கிராமங்களை சேர்ந்த மக்கள், தாங்கள் வளர்த்து வந்த பசு மற்றும் எருமை மாட்டிடமிருந்து கறந்த பாலினை ஆவின் நிர்வாகத்திடம் ஒப்படைத்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக ஆவின் நிர்வாகம் பாலை கொள்முதல் செய்யாமல் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.  இதனையடுத்து நிர்வாகம் பாலை கொள்முதல் செய்யாததால், வீணாகி பெரிதளவு நாங்கள் நஷ்டத்தை அடைந்துள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பின்னர் இதுதொடர்பாக பாலை கொள்முதல் செய்யும் தினக்கூலி தொழிலாளர்கள் ஆவின் நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் தற்போது ஆவின் பால் நிர்வாகம் தினக்கூலி தொழிலாளிகளான 110 பேரை பணிநீக்கம் செய்துள்ளனர். இதனையடுத்து எந்த வித முன்னறிவிப்பின்றி ஆவின் நிர்வாக இயக்குனர் வள்ளலார் தங்களை பணிநீக்கம் செய்ததாக தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னர் கடலூர்-சித்தூர் சாலையில் மக்கள் கறந்த பாலினை சாலைகளில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இதுதொடர்பாக தினக்கூலி தொழிலாளர்கள் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து முறையிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Tags : wage workers , Opposition , dismissal , 110 Avin daily ,wage workers ... !!
× RELATED ரவுடி சங்கரின் உடலை மறுபிரேத பரிசோதனை கோரிய மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு