×

ஆண்களை போல பெண்களுக்கும் சொத்துக்களை பிரிக்கும்போது சமபங்கு வழங்க வேண்டும்!: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

டெல்லி: ஆண்களைப் போலவே பெண்களுக்கு சொத்துரிமையில் சமபங்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சொத்துக்களை பிரிக்கும் போது ஆண்களைப் போலவே பெண் பிள்ளைகளுக்கும் சமபங்கு வழங்ககோரிய வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இத்தகைய தீர்ப்பினை வழங்கியிருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரையில் கடந்த 2005ம் ஆண்டிற்கு முன்பு இருந்த இந்து வாரிசு உரிமை சட்டத்தில் பெற்றோர்களின் சொத்தில் ஆண்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்றிருந்தது.

அதே சமயத்தில் 2005ல் பெற்றோர்களின் சொத்தில் ஆண்களை போலவே பெண்களுக்கும் சமபங்கு உண்டு என்று சட்ட திருத்தும் கொண்டுவரப்பட்டு இயற்றப்பட்டது. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல தரப்பினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் விசாரிக்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், ஏற்கனவே 2005ம் ஆண்டு மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள இந்திய வாரிசு உரிமை சட்ட திருத்தும் செல்லும் என்றும், பெற்றோர்களின் சொத்தில் ஆண்களுக்கு பங்கு இருப்பது போலவே பெண்களுக்கும் சமபங்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது பெண்களுக்கு சாதகமான ஒரு தீர்ப்பாகவே பார்க்கப்படுகிறது.


Tags : men ,Women ,division ,Supreme Court , Women , equity , division, property, men ,Supreme Court action verdict .. !!
× RELATED இலுப்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்