பெய்ரூட்டில் வெடிவிபத்து ஏற்பட்டதற்கு அம்மோனியம் நைட்ரேட் காரணமல்ல...: வெடிபொருள் நிபுணர்கள் கருத்து!

இத்தாலி: பெய்ரூட்டில் வெடிவிபத்து ஏற்பட்டதற்கு அம்மோனியம் நைட்ரேட் காரணமல்ல என்று வெடிபொருள் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் கடந்த 4ம் தேதி மிகப்பெரும் வெடிவிபத்து நடந்தது. உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கிய இந்த விபத்தில், இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளனர். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலர் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில், லெபனான் நாட்டில் 170 பேரை பலி வாங்கிய வெடிவிபத்து ஏற்பட்டதற்கு அம்மோனியம் நைட்ரேட் காரணமல்ல என்றும் ராணுவ ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் வெடிபொருளாக இருக்கலாம் என்றும்  வெடிபொருள் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  

இத்தாலியில் பர்மேசன் பகுதியை சேர்ந்த டானிலோ கோப் என்பவர் முன்னணி வெடிபொருள் நிபுணராக அறியப்படுகிறார். பெய்ரூட் வெடி விபத்து தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், துறைமுகத்தில் ஏற்பட்டது அம்மோனியம் நைட்ரேட் இவற்றால் ஏற்பட்ட வெடி விபத்து அல்ல என்று தெரிவித்துள்ளார். ஏனெனில் அம்மோனியம் நைட்ரேட் வெடிக்கும்போது ஒரு தெளிவற்ற மஞ்சள் வேகத்தை உருவாக்குகிறது என்று கூறியுள்ள டானிலோ, வெடிப்பின் வீடியோக்களை பார்க்கும் பொழுது ஆரஞ்சு நிற புகைகள் அதிகமாக வெளிப்பட்டதாக கூறியுள்ளார். வெடிமருந்து கிடங்கில் ஏதோ ஒரு பொருள் வினை ஊக்கியாக இருந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், லித்தியம் போன்ற பொருள் வெடிமருந்துடன் கலந்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: