×

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கன்னியாகுமரி மக்களவை தொகுதி எம்.பி. வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி: சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கன்னியாகுமரி மக்களவை தொகுதி எம்.பி. வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது மனைவிக்கும் பரிசோதனையில் கொரோனா இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மக்களவை தொகுதி எம்.பி. வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதியானநிலையில்,  தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட எம்.பி.க்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. சிவகங்கை மக்களவைத் தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் , நாகை மக்களவைத் தொகுதி எம்.பி. செல்வராசு, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி எம்.பி. ராமலிங்கம் ஆகிய எம்.பி.க்களும் கொரோனா தொற்று பாதிக்கப்படிருந்தது.

தமிழகத்தில் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் சிலருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகளும், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், தீயணைப்புத்துறையினர் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Tags : party ,constituency ,Vasantha Kumar ,Congress ,Kanyakumari Lok Sabha ,Chennai ,hospital , Kanyakumari Lok Sabha,constituency MP,Congress party. Vasantha Kumar diagnosed , corona infection: Admitted , private hospital ,chennai
× RELATED நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள்...