மழை வெள்ளம் குறித்து 6 மாநில முதல்வருடன் பிரதமர் ஆலோசனை

புதுடெல்லி: நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்து வருகின்றது. இதன்காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் கடும் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் மழை வெள்ளத்தின் காரணமாக ஏற்படும் பாதிப்புக்களை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி நேற்று 6 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் அசாம், பீகார், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொண்டனர். வெள்ள பாதிப்புக்களை எதிர்கொள்வதற்காக மாநிலங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் மாநிலங்களுக்கு தேவைப்படும் உதவிகள் குறித்து பிரதமர் கேட்டறிந்தார். மழை வெள்ளம் குறித்த முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை உள்ளிட்ட செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு தொழில்நுட்ப வசதிகளை விரிவாக பயன்படுத்தும்படியும் மாநில முதல்வர்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

Related Stories: