×

மேலும் 2 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று

சென்னை: கரூர் மாவட்டம் குளித்தலை தொகுதி திமுக எம்எல்ஏ ராமர் (69). இவர், வளர்ச்சி திட்டம், கொரோனா உதவிகள், கலைஞர் நினைவு தினம் உள்பட கட்சியின் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் இருமல் இருந்து வந்ததால் ராமர் எம்எல்ஏ, 2 நாட்களுக்கு முன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதன்முடிவு நேற்று முன்தினம் இரவு வந்தது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதிமுக எம்எல்ஏ: மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணன். இவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். புதுவை அமைச்சருக்கு கொரோனா: புதுச்சேரியில் ஏற்கனவே சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கல்வி அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

Tags : Corona , 2 more MLAs, corona infection
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...