கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் தோல்வி: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்குகிறது. சென்னையை விட கோவை, விருதுநகரில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. அதிகமாக பரிசோதனை செய்தால் தான் விரைவாக கொரோனாவை ஒழிக்க முடியும். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் முழு தோல்வியடைந்து விட்டன. இளம்பிள்ளை நோய், எய்ட்ஸ் நோய் ஆகியவற்றிற்கு எதிராக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செய்த விழிப்புணர்வு பிரசாரம் தான் அந்த நோய்கள் குறித்து மக்களிடையே இருந்த அச்சம், பீதி முற்றிலும் ஒழிக்கப்பட்டது. எனவே, உலகத்திலேயே கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா முன்னணிப் பங்கு வகித்து வருகிறது. இதை எதிர்கொள்வதற்கு மருத்துவ சிகிச்சைகளை செய்கிற மத்திய - மாநில அரசுகள், விழிப்புணர்வு பிரசாரத்தை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். இதை அரசு செய்வதை விட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மேற்கொள்வது அதிக பயனை தரக்கூடியதாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: