×

சொல்லிட்டாங்க...

* சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு வரைவு மசோதா திரும்ப பெறப்பட வேண்டும். இல்லாவிட்டால் நாளடைவில் நாட்டுக்கு பேரழிவை உண்டாக்கி விடும். - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

* இந்தியக் குடிமைப் பணிகள் அறிவிக்கும் தேர்வு முடிவுகள் பற்றி வெளிப்படையான ஆய்வு நடத்தி, நேர்ந்திருக்கும் தவறுகளை களைந்து, நீதி வழங்க வேண்டும். - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

* கொரோனாவால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டு குடும்பங்களை நிர்க்கத்தி ஆக்குகிறது. - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

* இந்தி மொழிதான் ஆட்சி மொழி, அலுவல் மொழி என்பதை வலிந்து நிலைநாட்ட பாஜ அரசு தொடர்ச்சியாக முயன்று வருகிறது. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

Tags : Told
× RELATED பொங்கல் கரும்பில் கூட ஸ்டிக்கர் ஒட்டி...