பாலெர்மோ ஓபன் டென்னிஸ் பியோனா சாம்பியன்

பாலெர்மோ: இத்தாலியில் நடந்த பாலெர்மோ ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டித் தொடரின் ஒற்றையர் பிரிவில், பிரான்ஸ் வீராங்கனை பியோனா பெர்ரோ சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் எஸ்டோனியாவின் அனெட் கோன்டாவெய்ட்டுடன் (22வது ரேங்க்) மோதிய பியோனா பெர்ரோ (23 வயது, 53வது ரேங்க்) 6-2, 7-5 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார். இப்போட்டி 1 மணி, 43 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இது பியோனா வென்ற 2வது டபுள்யு.டி.ஏ பட்டமாகும். இந்த வெற்றியால் ஒற்றையர் தரவரிசையில் அவர் முதல் முறையாக டாப் 50ல் இடம் பெற உள்ளார்.

Related Stories: