சில்லி பாயின்ட்...

* ஐபிஎல் டி20 தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) நடத்துவதற்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

* உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் வீரர்களாக கோஹ்லி, ரோகித், டோனி விளங்குவதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப் போவதாக வெளியான தகவலை இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மறுத்துள்ளார்.

* இங்கிலாந்து அணியுடன் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தோற்றதால் ரசிகர்கள் மட்டுமல்ல நாங்களும் மிகுந்த விரக்தி அடைந்துள்ளோம் என்று பாக். அணி தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் கூறியுள்ளார்.

* இந்தியா, மோகன் பகான் கால்பந்து அணிகளுக்காக விளையாடிய முன்னாள் நட்சத்திரம் மணிதோம்பி சிங் (39 வயது), மணிப்பூரில் நேற்று முன்தினம் காலமானார்.

Related Stories: