×

பயிற்சி வகுப்புகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு இல்லை: தீர்ப்பாயம் உத்தரவு

புதுடெல்லி:  கல்வி நிறுவனங்கள் வழங்கும் சில சேவைகளுக்கு, நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்நிலையில், சி.ஏ மற்றும் கணக்கியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தும் ஆந்திராவில் உள்ள ஒரு நிறுவனம், ஜிஎஸ்டி விலக்கு கோரி ஆந்திராவில் உள்ள ஜிஎஸ்டி வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தது. இதனை விசாரித்த தீர்ப்பாய நீதிபதிகள், மேற்கண்ட படிப்புகளுக்கு பயிற்சி வகுப்புகள் கட்டாயமல்ல. அதோடு, பயிற்சி வகுப்பு முடித்தவர்களுக்கு சம்பந்தப்பட்ட படிப்பு முடித்ததற்கான சான்றுகள் எதுவும் வழங்கப்படுவதில்லை. இதற்காக அவை அங்கீகரிக்கப்படவும் இல்லை என்பதை சுட்டிக்காட்டினர்.

மேற்கண்ட நிறுவனம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக தொழில் ரீதியாக துவக்கப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய பயிற்சி வகுப்புகளுக்கு ஜிஎஸ்டி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பயிற்சி வகுப்புகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. ஏற்கெனவே இதுபோன்ற, ஜிஎஸ்டி தீர்ப்பாயத்தின் மகாராஷ்டிரா அமர்வும் இதே போன்ற தீர்ப்பை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், சிஏ மட்டுமின்றி நீட், எய்ம்ஸ் உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளுக்கும் ஜிஎஸ்டி விலக்கு இல்லை என உறுதியாகியுள்ளது.

Tags : Training Class, GST, No Exemption, Tribunal
× RELATED 2023ல் இந்தியாவின் விளையாட்டு வர்த்தகம்...