×

பெயரளவில் மட்டும் தற்சார்பு போதுமா? 9 நாடுகளுடன் இந்தியா வர்த்தக பற்றாக்குறை

புதுடெல்லி: சீன எதிர்ப்புக்கு பிறகு, அதிகமாக ஓங்கி ஒலிக்கும் குரல் தற்சார்பு இந்தியா. இன்று நேற்று மட்டுமல்ல, நீண்ட காலமாகவே உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு முனைப்புக்காட்டி வருகிறது. தொழில் தொடங்க பிற நாட்டு நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கிறது. எப்படியாவது இந்தியாவை ஏற்றுமதி மையமாக்கி விட வேண்டும் என்பதுதான் இலக்கு. ஆனால், உண்மை வேறாக உள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பொருட்கள், உதிரி பாகங்கள் ஏற்றுமதி அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

வர்த்தக அமைச்சக புள்ளிவிவரத்தின்படி, வர்த்தக பங்குதாரர்களாக உள்ள 10 நாடுகளில் 9 நாடுகளுடன் இந்தியாவுக்கு வர்த்தக பற்றாக்குறை உள்ளது தெரிய வந்துள்ளது. அமெரிக்கா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட் உட்பட 10 நாடுகளுடன் இந்தியா வர்த்தக பங்குதாரராக உள்ளது. இதில், அமெரிக்காவுடன் மட்டும் 1,700 கோடி டாலருக்கு வர்த்தக உபரி உள்ளது. மற்ற நாடுகளுடனான வர்த்தகத்தில், கடந்த நிதியாண்டு இறுதியில் ஒட்டுமொத்த இறக்குமதி, ஏற்றுமதியை விட 11370 கோடி டாலர் அதிகம். இதற்கு முந்தைய ஆண்டில் இது 11800 கோடி டாலராக இருந்தது.

ஊழல்களை தொடர் ந்து வைர வர்கத்துக்கு விதிக்கப்பட்ட ஏராளமான கெடுபிடிகள், ஆடைகள் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதியில் சரிவு போன்றவை, இந்தியாவின் ஒட்டு மொத்த ஏற்றுமதி சரிய முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இதுமட்டுமின்றி, சீனாவில் ஹாங்காங்கில் இருந்து இறக்குமதி அதிகரித்தது. இதை தொடர்ந்து, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொம்மை முதல், பிளாஸ்டிக் பொருட்கள், விளையாட்டு பொருட்கள் உட்பட 371 பொருட்களுக்கு இந்தியா தடை விதித்தது. இவற்றின் இறக்குமதி மதிப்பு 12700 கோடி டாலர்.  

இப்படி, ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரித்ததால் வர்த்தக பற்றாக்குறை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு முனைப்பு காட்டியது. இதுபோல், தற்சார்பு இந்தியா திட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பு திட்டங்கள் சலுகைகள் அறிவிக்கப்பட்டன.  இதெல்லாம் பெயரளவில் இருக்கக்கூடாது. அப்போதுதான், இறக்குமதியை சார்ந்திருப்பது குறையும் என்கின்றனர் நிபுணர்கள்.

Tags : countries ,India , Nominally, is self-sufficiency enough ?, 9 countries, n India, trade deficit
× RELATED வெளிநாடுகளில் இருந்து குஜராத்,...