×

டெல்டா விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு பிரிமியம் செலுத்த கால அவகாசம்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு பிரிமியம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எதிர்பாராத விதமாக புயல், வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகள் நிகழ்ந்தால் விவசாயிகளை பாதுகாக்க, பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு பிரிமியம் தொகை கட்டுவதற்கு கடந்த மாதம் 31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் வேலை நிறுத்தப் போராட்டம், கணினி தொழில் நுட்ப கோளாறு உள்ளிட்ட காரணங்களால் கூட்டுறவு சங்கங்களில் குறிப்பிட்ட காலத்திற்குள் பிரிமிய தொகையை விவசாயிகளால் செலுத்த முடியாமல் போனது. தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் குறுவை சாகுபடி காப்பீடுத் திட்டத்தில் இணைய முடியாமல் கவலைக்கு உள்ளாகியுள்ளனர். இதுவரை 1.63 லட்சம் ஏக்கருக்குதான் பயிர் காப்பீடு தொகை செலுத்தியுள்ளனர். மீதம் 1.50 லட்சம் ஏக்கருக்கு மேல் பயிர் காப்பீடு செய்ய முடியவில்லை. எனவே காப்பீடு பிரிமியம் தொகை செலுத்த இன்னும் 15 நாட்கள் கால அவகாசம் நீட்டித்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : delta farmers ,GK Vasan , Delta Farmer, Crop Insurance Premium, Payment Period, GK Vasan
× RELATED தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக ஈரோடு...