×

ரூ.1,000 கோடி போதை மருந்து பறிமுதல்

மும்பை: ஈரானில் இருந்து நவி மும்பை, நவசேவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்துக்கு வந்த கப்பலில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதை மருந்து கடத்தி கொண்டு வரப்பட்டிருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அதிகாரிகள் துறைமுகத்துக்கு வந்த ஈரான் கப்பலில் இருந்த கன்டெய்னர்களை திறந்து அதிரடி சோதனை நடத்தினர். அந்த கன்டெய்னர்களில் மொத்தம் 191 கிலோ ஹெராயின் போதை பவுடர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.1,000 கோடியாகும்.

போதை மருந்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், ஆயுர்வேத மருந்து என கூறி போதை மருந்தை இறக்குமதி செய்ய போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த சுங்கத்துறை ஏஜென்ட்களான நெரூலை சேர்ந்த மீனநாத் போட்கே, தானே மாவட்டத்தை சேர்ந்த கொண்டிபாவு பாண்டூரங் குன்ஜால் ஆகிய இருவரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த போதை மருந்து ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் நாட்டுக்கு கடத்தப்பட்டு, அங்கிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த கடத்தலில் டெல்லியைச் சேர்ந்த இறக்குமதியாளர் ஒருவர் உட்பட மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டு நேற்று விசாரணைக்காக மும்பைக்கு அழைத்து வரப்பட்டனர்.

Tags : Rs 1,000 crore, drugs, confiscated
× RELATED போலி நகைகளை அடகு வைத்து பல லட்சம்...