×

வேலம்மாள் நெக்சஸ் குழுமம் சார்பில் மருத்துவ ஆலோசனை

திருவள்ளூர்: முகப்பேர் வேலம்மாள் நெக்சஸ் குழுமம் சார்பில் பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பதிவு செய்யப்பட்ட மருத்துவ மேற்பார்வையாளர் டாக்டர் தேன்மொழியால் வழங்கப்படுகிறது. இந்த மருத்துவ ஆலோசனை நிகழ்வு இன்று தொடங்கி ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளிலும் காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணிவரை நடைபெற உள்ளது. இதில், மனச்சோர்வை சமாளிக்க ஆலோசனை வழங்கப்படுகிறது. இந்த மெய் நிகர் ஆலோசனையில் சேரவும், மேலதிகமான பல்வேறு தகவல்களைத் தெளிவாக அறிந்து கொள்ளவும் www.velamalnexus.com என்ற இணையதளத்தை பார்வையிடலாம். மேலும், விவரங்களுக்கு 9444010099 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் தெரிவித்துள்ளார்.

Tags : Velammal Nexus Group , Velammal, Nexus Group, Medical Consulting
× RELATED வேலம்மாள் நெக்சஸ் குழுமம் சார்பில் கோவிட் ஷீல்டு இலவச தடுப்பூசி முகாம்