மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வடசென்னை அனல் மின் நிலைய வாயிலில் சிஐடியு, தொமுச, ஐஎன்டியூசி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எல்ஐசி, நிலக்கரி, ரயில்வே, பாதுகாப்புத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் தனியார் மயமாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், மக்களுக்கு சேவையாற்றி வரும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதால் ரயில் கட்டணம், மின்கட்டணம் பன்மடங்கு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக குற்றம்சாட்டினர். விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள் பெற்று வரும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் அம்சங்களை உள்ளடக்கிய மின்சார சட்ட திருத்த மசோதா 2020ஐ கைவிட வேண்டும் எனவும், வேலை நேரத்தை 8மணி நேரத்தில் இருந்து 12மணி நேரமாக உயர்த்துவதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Stories: