×

கோரத்தாண்டவம் ஆடும் கொடிய கொரோனா; உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது..!!!

ஜெனிவா: உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது என உலக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் உலக அளவில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 12,911,386 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,34,247-ஆக உள்ளது. கொரோனா வைரஸ் என்ற பெயரை கேட்டாலே அஞ்சி நடுங்குகிற அளவுக்கு, இன்றைக்கு அந்த வைரஸ் உலகை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. கொரோனா வைரஸ் உருவானது என்னவோ சீனாவில்தான். ஆனால் இப்போது இந்த வைரஸ் சீனாவில் வேகம் குறைந்துள்ளது.

நாளுக்கு நாள் அங்கு இந்த வைரஸ் வீரியம் குறைந்து வருகிறது. அங்கு மக்கள் பாதிக்கும் சதவிகிதம் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது. கொரோனாவால் 51 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. 30 லட்சம் பாதிப்புகளுடன் பிரேசில் 2-வது இடத்திலும் 22 லட்சம் பாதிப்புகளுடன் இந்தியா 3-வது இடத்திலும் உள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பு 2 கோடியை தாண்டி உள்ளது. கொரோனாவில் இருந்து 1.29 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.

Tags : victims , Coronary, corona, world size
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் மயங்கி விழுந்து 2 பேர் பலி: சேலத்தில் சோகம்