×

கோவை அருகே போளுவம்பட்டியில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த 12 வயதுடைய பெண் யானை உயிரிழப்பு..!!

கோவை:  கோவையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 12 வயதுடைய பெண் யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் போளுவம்பட்டி வனசாரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பெண் யானை ஒன்று இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.

இதனையடுத்து மருத்துவ தலைவர் சுகுமார் என்பவரின் தலைமையில் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் என்பவரும் இணைந்து குழு ஒன்றை அமைத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட 12 வயதுடைய பெண் யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். அதாவது கடந்த 2 நாட்களாக 50க்கும் மேற்பட்ட குளுக்கோஸ் பாட்டில்களில் நோய் எதிர்ப்பு சக்தி அடங்கிய மருந்தினை யானைக்கு அளிக்கப்பட்டு வந்தனர். இதனையடுத்து யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும் அதன் உடல்நிலையில் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில்தான் தற்போது அந்த பெண் யானை இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இதனையடுத்து முதற்கட்டமாக யானை உடல் உபாதைகளாலே உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து யானையின் உடலை உடற்கூறு ஆய்விற்குட்படுத்திய பின்னரே, யானையின் இறப்புக்கு என்ன? காரணம் என்பது தெரியவரும் என மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதுவரை கோவை மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை சுமார் 16 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Poluvampatti ,Coimbatore , female elephant ,Poluvampatti ,Coimbatore
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...