×

சிங்கம்புணரியில் தயாராகும் அருங்கோண வடிவ கேரம்போர்டு

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் ஸ்போர்ட்ஸ் கடை நடத்திவருபவர் பாபு. தனது கடையில் புதிதாக ஆறு பேர் விளையாடக்கூடிய அறுங்கோண வடிவ கேரம் போர்டை தயாரித்து அசத்தியுள்ளார். புது முயற்சியாக இப்பகுதியில் அவர் தயாரித்த கேரம் போர்டு பல்வேறு தரப்பு மக்களையும் ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஊரடங்கு காலத்தில் மக்கள் வெளியே செல்லாமல் இருக்க வீடுகளில் தாயக்கட்டை, பல்லாங்குழி, ஆகியவற்றை விளையாடி பொழுதை போக்கி வருகின்றனர். மேலும் பொழுதுபோக்கை கூட்டும் வகையில் குடும்பத்தினர் அனைவரும் விளையாடும் வகையில் அருங்கோண வடிவில் கேரம் போர்டு தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

இதில் மாவட்டம் முழுவதும் மட்டுமின்றி கேரளா, பெங்களூரு உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. சிங்கம்புணரி நகரின் அடையாளமாக இந்த கேரம்போர்டு மாறியுள்ளதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாபு கூறுகையில், பொழுதுபோக்கிற்காக மக்கள் அதிக அளவில் கேரம்போர்டு, செஸ்போட்டு, பிசினஸ் விளையாட்டு உபகரணங்களை வாங்கி செல்கின்றனர் இதில் முக்கியமாக கேரம்போர்டு அதிக அளவில் சிறுவர்கள் பெரியவர்கள் விளையாடுகின்றனர். நான்கு பேர் மட்டும் விளையாடும் கேரம்போட்டுக்கு மாற்றாக ஆறு பேர், மற்றும் எட்டுபேர் விளையாடும் வகையில் உருவாக்க முயற்சி செய்தேன்.

இதில் ஆறு பேர் விளையாட கூடிய கேரம்போர்டுக்கு நல்லவரவேற்பு உள்ளது. 4 பேர் கேரம்போர்டுக்கு மொத்தம் 9+9+1 என 19 காயின் உள்ளது. 6 பேர் விளையாடும் கேரம்போர்டுக்கு 11+11+1 என 23 காயின் உள்ளது. தேவைப்படுபவர்களுக்கு கேரம்போர்டு, காயின், பவுடர் என மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது என்றார்.

Tags : Hexagonal ,Singampunari , Singampunari, hexagonal shaped cardboard
× RELATED மது விற்றவர் கைது