×

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுடப்பட்ட பா.ஜ.க. மாவட்ட தலைவர் அப்துல் ஹமீது நஜார் உயிரிழப்பு!

புத்காம்: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுடப்பட்ட பா.ஜ.க. மாவட்ட தலைவர் அப்துல் ஹமீது நஜார் உயிரிழந்துள்ளார். சமீப காலங்களாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்துவது அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம், பந்திபோரா பாஜக முன்னாள் தலைவர் வாசிம் பாரி, அவரது தந்தை மற்றும் சகோதரர் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேரும் உயிரிழந்தனர். அதேபோல், கடந்த 6ம் தேதி, குல்காம் பகுதியில் பாஜக பஞ்சாயத்து தலைவர் சர்பஞ்ச் சஜத் அகமது கான்டே பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார்.

 இந்நிலையில், மேலும் ஒரு பாஜக நிர்வாகி பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளார். மொஹிந்த்போரா பகுதியில் வசித்து வந்த அப்துல் ஹமீத் நஜார், புத்காம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியில் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு மோர்ச்சா பிரிவுத் தலைவராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை நடைபயிற்சி சென்ற அப்துல் ஹமீத் நஜார் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.


Tags : terrorists ,Abdul Hameed Nazar ,Jammu ,BJP ,Kashmir ,Abdul Hamid Nazar , Jammu and Kashmir, Terrorists, BJP, Abdul Hamid Nazar, killed
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...