×

இல்லத்தரசிகளுக்கு மீண்டும் மீண்டும் இன்ப செய்தி: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.216 குறைந்து ரூ.42, 864க்கு விற்பனை.!!!

சென்னை: தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்த நிலையில் இன்று 2 நாட்களாக சற்று குறைந்து வருகிறது.  உலகம் முழுவதும் கொரோனாவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொருளாதாரமே நிலை  குலைந்து இருக்கும் சூழ்நிலையிலும் தங்கம் விலை மட்டும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது திருமணம்  உள்ளிட்ட விசேஷங்களுக்கு சிறுக, சிறுக பணம் சேர்த்து நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சி அடையச்  செய்துள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் 20ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.37,616க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை  குறையாமல் தொடர்ச்சியாக உயர்ந்து வந்தது. கடந்த 1ம் தேதி தங்கம் ஒரு சவரன் 41,568க்கும், 3ம் தேதி 41,592, 4ம்  தேதி 41,616,  5ம் தேதி 42,592க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 18வது நாளாக கடந்த 7-ம் தேதி ரூ.46 அதிகரித்து  ஒரு கிராம் ரூ.5420க்கும், சவரனுக்கு ரூ.368 அதிகரித்து ஒரு சவரன் ரூ.43,360க்கும் விற்கப்பட்டது. இது தங்கம் விலை  வரலாற்றில் அதிகப்பட்சம்.

இந்நிலையில், கடந்த 8-ம் தேதி நேற்று முன்தினம் தங்கத்தின் விலை சற்று குறைந்து. சென்னையில் ஆபரணத்  தங்கம் சவரனுக்கு ரூ.288 குறைந்து ஒரு சவரன் ரூ.43,040க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை  என்பதால் தங்கம் விலை மாற்றமில்லாமல் நேற்று முன்தினம் விலையில் விற்பனையானது. இந்நிலையில், இன்று  வர்த்தக தொடக்கத்தில் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.216 குறைந்து  ஒரு சவரன் ரூ.42,864-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு 62 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.5358-க்கும்  விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை 2 வது நாளாக குறைந்து வருவது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியே ஏற்படுத்தியுள்ளது. நகை பிரியர்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.  இதனைபோல், சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி கிராமிற்கு  ரூ.20 காசுகள் குறைந்து ரூ.82.63-க்கு விற்பனை செய்யப்படுகிறது.



Tags : housewives ,Chennai , Good news for housewives again: Jewelery gold in Chennai is down by Rs 216 to Rs 42, 864 per razor !!!
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...