×

சுதந்திர தினத்தை முன்னிட்டு தியாகிகள் கவுரவிப்பு

திருவள்ளூர்: நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 8ம் தேதி 1942ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கு பெற்ற தியாகிகளை கவுரவிக்கும் வகையில், அப்போராட்டத்தில் பங்கேற்ற திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி வட்டம் பாடியநல்லூர் பகுதியில் வசித்து வரும் சுதந்திர போராட்ட தியாகிகள் சந்தியாகு (94), கணேசன் (93) ஆகியோரை இந்திய குடியரசு தலைவரால் அனுப்பிவைக்கப்பட்ட அங்கவஸ்திரம் மற்றும் சால்வை ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் அணிவித்து, கவுரவித்தார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி, பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் ச.வித்யா, வட்டாட்சியர் மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Martyrs ,Independence Day , Independence Day, Prelude, Martyrs, Tribute
× RELATED பரமக்குடியில் இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி