ஒரு வாரத்தில் 3வது முறையாக கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தீவிபத்து: நாசவேலை காரணமா?

சென்னை: கொரோனா பரவலை தடுக்க கோயம்பேடு மார்க்கெட் கடந்த சில மாதங்களாக மூட்டப்பட்டு, திருமழிசையில் தற்காலிக மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், அங்குள்ள ஒரு கடையில் தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதை தொடர்ந்து கடந்த 6ம் தேதி காய்கறி மார்க்கெட் பகுதியில் மூடப்பட்டுள்ள முடி திருத்தம் செய்யும் கடை மற்றும் அருகில் உள்ள கடையில் தீவிபத்து ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை 10 மணிக்கு கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் அடுத்தடுத்து கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் சுற்றித் திரியும் மர்ம நபர்கள் கடைகளின் முன்பு அமர்ந்து மது  அருந்துவது, கஞ்சா அடிப்பது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு  வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் 3வது முறையாக தீவிபத்து ஏற்பட்டுள்ளதால், போதை ஆசாமிகள் கடைக்கு தீவைத்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: