×

அண்டை மாநிலங்கள் எல்லாம் பொதுப்போக்குவரத்துக்கு பச்சைக்கொடி காட்டியபின் பஸ்களை இயக்க தமிழகம் மட்டும் தயங்குவது ஏன்?

கொரோனா ஊரடங்கால் மக்கள் பலவிதங்களில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுப்போக்குவரத்து இயங்காமல் இருப்பதுதான் அதில் முதலிடம் வகிக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மார்ச் 25ல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் பொதுப்போக்குவரத்துக்கு தடை போடப்பட்டது. இடையில் ஜூன் மாதம் ஒரு சில வாரம் 50 சதவீதம் பஸ்கள் இயங்க அனுமதிக்கப்பட்டது. அதுவும் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் மட்டும். கொரோனா பரவல் அதிகம் இருக்கவே ஜூலை மாதம் சில தளர்வுகளுடன் ஊரடங்கு மீண்டும் அமலானது.

அப்போது பொதுப்போக்குவரத்துக்கு முழுதாக தடை போடப்பட்டது. 7ம் கட்டமாக இம்மாதம் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கிறது. இதுவரை பொதுப்போக்குவரத்து முடங்கியே கிடக்கிறது. இதனால் மக்கள் சொல்ெலாணா துன்பத்துக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக கிராமப்புற, ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நிலைதான் பரிதாபகரமாக மாறியுள்ளது. அவர்களது இயக்கத்தின் ஆதாரமே பேருந்துதான். இதன் முடக்கத்தால் கடைகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் செல்ல முடியாமல் கடும் அவதிப்படுகின்றனர். இதைத்தவிர கிட்டத்தட்ட 6 மாதங்களாக பணிமனைகளிலேயே பேருந்துகள் முடங்கிக் கிடக்கின்றன. இதனால் போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டமடைந்துள்ளன. தவிர, அனைத்து பேருந்துகளும் பாழாகி வருகின்றன.

பொதுப்போக்குவரத்து இயக்கத்தை நிறுத்தி வைத்ததால் மட்டும் கொரோனா பரவல் ஒன்றும் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடவில்லை. சொல்லப்போனால், ஜூலைக்கு பின் அதிகரிக்கத்தான் செய்தது. இந்த நிலையை உணர்ந்துதான் கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற அண்டை மாநிலங்கள் பொதுப்போக்குவரத்துக்கான தடையை நீக்கி இயங்கச் செய்துள்ளன. ஆனால் தமிழக அரசு இதுவரை பொதுப்போக்குவரத்து விஷயத்தில் தளர்வு காட்டவே இல்லை. மற்றொருபுறம் இ-பாஸ் முறைகேடுகளும் மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளன. எனவே உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் பொதுப்போக்குவரத்தை இயக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்து நான்கு பேரின் பதிவுகள் இங்கே:

Tags : Tamil Nadu ,states , Neighboring states, public transport, green flag, bus operation, Tamil Nadu only, why hesitate?
× RELATED வாக்களிப்பின் ரகசியமெல்லாம் போயே...