×

சொல்லிட்டாங்க...

* இடைக்கால தலைவர் சோனியா காந்தி, கட்சியின் தலைமை பொறுப்பு என்ற பாரத்தை காலம் முழுவதும் சுமப்பார் என்று எதிர்பார்ப்பது சரியல்ல. - காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர்

* நம் நாடு வேளாண் உற்பத்தியில் எந்த பிரச்னையையும் சந்திக்கவில்லை. மாறாக, அறுவடைக்கு பிந்தைய இழப்புகளை பெருமளவில் சந்திக்கிறது. - பிரதமர் நரேந்திர மோடி

* இலங்கையின் அனைத்து அதிகாரங்களும், போர்க்குற்றங்களை நிகழ்த்திய குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதால், இனி ஈழத்தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் என தோன்றவில்லை. - பாமக நிறுவனர் ராமதாஸ்

* தமிழகத்தில் எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அளித்து வருகிறோம். - அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

Tags : Told
× RELATED சொல்லிட்டாங்க...