×

சில்லி பாயின்ட்...

* பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்று 1-0 என முன்னிலை பெற்ற நிலையில், எஞ்சியுள்ள 2 டெஸ்டிலும் இருந்து குடும்ப காரணங்களுக்காக விலகுவதாக ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.
* ஐபிஎல் டி20 தொடரின் 13வது சீசனின்போது வீரர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றை தவிர்ப்பதற்கான முயற்சியில் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். களத்தின் உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்யும் வகையில் கோவிட்-19 விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என ஆஸி. முன்னாள் வேகம் பிரெட் லீ வலியுறுத்தி உள்ளார்.
* டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் பாகிஸ்தான் தொடக்க வீரர் ஷான் மசூத், இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர். ஓல்டு டிரபோர்டு டெஸ்டின் முதல் இன்னிங்சில் 156 ரன் விளாசிய மசூத் 14 இடங்கள் முன்னேறி முதல் முறையாக 19வது இடத்தை பிடித்துள்ளார்.  
* சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புறப்படும் முன்பாக சென்னையில் பயிற்சி முகாமில் பங்கேற்க உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
* மீண்டும் பயிற்சியை தொடங்கி உள்ள பேட்மின்டன் நட்சத்திரம் சாய்னா நெஹ்வால், சில வாரங்களுக்குப் பின்னரே தேசிய விளையாட்டு ஆணைய மையத்தில் பயிற்சி மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.
* செல்சியா அணிக்கு எதிரான போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்ற பேயர்ன் மியூனிச் அணி 7-1 என்ற மொத்த கோல் அடிப்படையில் சாம்பியன்ஸ் லீக் கால் இறுதிக்கு முன்னேறியது.

Tags : Roulette, point
× RELATED சில்லி பாயின்ட்...