உயிர் காக்கும் மருந்துகளை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை

சென்னை: உயிர் காக்கும் மருந்துகளை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுடன், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி :

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுவருகிறது. சஞ்சீவனி திட்டம் தொடங்கிய நாள் முதல் தமிழகத்தில் அதிகம் பேர் பயன் பெற்றுள்ளனர். தற்போது வரை 35 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர்.

சென்னையில் பாதிப்பை விகிதம் 40 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக மாறி உள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் தற்போது 18 சதவீதம் பேர் மட்டுமே தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயல் பாதிக்கப்படும் எண்ணிக்கை குறைத்து வைத்து காட்ட வேண்டும் என்றால் சோதனை செய்பவர்கள் எண்ணிக்கை குறைக்கலாம். ஆனால் தொடர்ந்து சோதனையை அதிகரித்து கொண்டே உள்ளோம் தமிழகத்தில் எந்த ஒரு ஒளிவு மறைவும் இல்லாமல் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை அளித்து வருகிறோம்.

தமிழகத்தில் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் உயிர்காக்கும் மருந்துகளை அதிக விலைக்கு ஒரு சிலர் விற்பதாக புகார் எழுந்து உள்ளது. இவ்வாறு மருந்துகளை அதிக விலைக்கு விற்கும் நபர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கொரோனாவால் இறந்தவர்கள் என்பது தவறு. இதுகுறித்து ஆய்வு செய்து எத்தனை பேர் என்பதை ஆய்வு முறையான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: