அரை மணி நேரத்தில் கொரோனாவை கண்டறியும் ‘ராபிட் ஆன்டிஜென்’ சோதனை இல்லை: தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு

சென்னை: அரை மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் ‘ராபிட் ஆன்டிஜென்’ சோதனை தமிழகத்தில் செய்யப்படுவதில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை உறுதி செய்ய ஆர்டிபிசிஆர் சோதனைதான் சிறந்தது என்று  மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த சோதனை முடிவுகள் வெளியாக 2 நாட்கள் ஆகும். எனவே அனைத்து மாநிலங்களும் ‘ராபிட் ஆன்டிஜென்’ பரிசோதனை முறையை பின்பற்றலாம் என்று ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியது. இது தொடர்பாக ஜூன் 14ம் தேதி ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல்களை வழங்கி இருந்தது. இதனைத் தொடர்ந்து ஜூலை 16ம் தேதி மீண்டும் ஐசிஎம்ஆர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தது. அதில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் மற்றும் அதிக பாதிப்பு உள்ள பகுதிகளில் ‘ராபிட் ஆன்டிஜென்’ பரிசோதனையை மேற்கொள்ளலாம் என்று அறிவுறுத்தியது.

இதன்படி ராபிட் ஆன்டிஜென் சோதனையில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் அவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக கருத வேண்டும். இதன்படி டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் இந்த சோதனையை அதிக அளவில் செய்தன.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இந்த சோதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் தமிழகத்தில் ராபிட் ஆன்டிஜென் ேசாதனை முறை பயன்படுத்தபடுவதில்லை என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 

Related Stories: