×

அமித்ஷா குணமானாரா? மத்திய உள்துறை விளக்கம்

புதுடெல்லி: கொரோனா பாதிப்பில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குணமாகி விட்டதாக வெளியான தகவலை அரசு மறுத்துள்ளது. கடந்த 2ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இது பற்றி அமித்ஷா வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘கொரோனாவுக்கு அறிகுறிகளை தொடர்ந்து நான் பரிசோதனை செய்தேன். அதில், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறேன், ’ என கூறியிருந்தார்.

இந்நிலையில், பாஜ எம்பியான மனோஜ் திவாரி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘அமைச்சர் அமித்ஷா குணமாகி விட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனயில் நெகட்டிவ் என வந்துள்ளது,’ என தெரிவித்தார். ஆனால், இந்த பதிவு வைரலான நிலையில், சிறிது நேரத்திலேயே அவர் தனது பதிவை அகற்றி விட்டார். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ‘‘உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்னும் மருத்துவமனையில்தான் இருக்கிறார். அவர் குணமாகி விட்டாரா என்பதை அறிய, இன்னும் பரிசோதனை செய்யப்படவில்லை,’’ என்றனர்.

Tags : Amitsha , Amitsha Healed ?, Central Interior, Description
× RELATED மருத்துவமனையில் மீண்டும் அமித்ஷா