நாடு முழுவதும் ஒரு நிமிடத்துக்கு 500 பரிசோதனை: ஒருநாள் பாதிப்பில் அமெரிக்காவை முந்தியது

புதுடெல்லி: இந்தியாவில் நிமிடத்துக்கு 500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவதே, தொற்றை அதிகளவில் கண்டுபிடிப்பதற்கான காரணமாக உள்ளது. நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு, பலி நிலவரம் பற்றி, மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று அறிக்கை வெளியிட்டது. அதில், ‘கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனா தொற்றால், புதிதாக 64,399 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு 21,53,011 ஆக உயர்ந்துள்ளது. இதில், 14.8 லட்சம் பேர் குணமாகினர். இதன் சதவீதம் 68.78 ஆக உயர்ந்துள்ளது. 6,28,747 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 861 பேர் இறந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 43,379 ஆக உயர்ந்துள்ளது. பலி சதவீதம் 2.07 ஆக குறைந்துள்ளது,’ என்று கூறப்பட்டுள்ளது.

மற்ற புள்ளி விவரங்கள் வருமாறு:

*  கடந்த 5 நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் முதல், 2ம் இடத்தில் உள்ள அமெரிக்கா, பிரேசிலை இந்தியா முந்தி வருகிறது.

* அமெரிக்காவில் நேற்று முன்தினம் 58,173 பேரும், பிரேசிலில் 49,970 பேரும் பாதிக்கப்பட்டனர். ஆனால், இந்தியாவில் தொடர்ந்து 3வது நாளாக ஒருநாள் பாதிப்பு 60 ஆயிரத்தை கடந்துள்ளது.

*  நாட்டில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. நேற்று முன்தினம் இங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது.

* நாடு முழுவதும் இதுவரை 2.41 கோடி பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் 7.19 லட்சம் மாதிரிகள் எடுக்கப்பட்டன. நாட்டில் நிமிடத்துக்கு 500 பேரிடம் பரிசோதனை நடத்தப்படுகிறது.

* உலகளவில் மொத்தம் 1.96 கோடி பேர் தொற்றினால் பாதித்துள்ளனர். இதுவரை 7.26 லட்சம் பேர் இறந்துள்ளனர்.

* 3 வாரத்தில் 10 லட்சம் பாதிப்பு

* இந்தியாவில் கடந்த 3 வாரத்தில் கூடுதலாக 10 லட்சம் பேர் பாதித்துள்ளனர்.

* மே மாதத்தில் பாதிப்பு ஒரு லட்சமாக இருந்தது.

* இது, ஜூனில் 5 லட்சத்தை கடந்தது.

* ஜூலை தொடக்கத்தில் 6 லட்சமாக உயர்ந்தது.

* ஜூலை 17ம் தேதி பாதிப்பு 10 லட்சமாக இருந்தது.

* ஜூலை 31ம் தேதி 16 லட்சமாக உயர்ந்தது.

* ஆக.8ம் தேதி 21 லட்சத்தை கடந்தது.

Related Stories: