×

கலைஞரின் நினைவு நாளையொட்டி அன்னதானம், நல உதவிகள்

மதுராந்தகம்: மதுராந்தகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 2ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம், நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மதுராந்தகம் அடுத்த படாளம் கூட்ரோடு பகுதியில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ,  நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், மதுராந்தகம் வடக்கு ஒன்றிய செயலாளர் சத்யசாய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் பெரும்பாக்கம் ஊராட்சியில், அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் தம்பு, நிர்வாகிகள் நந்தகோபால், செம்பூண்டி சிவா, கலியுக கண்ணதாசன், ஊராட்சி செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஏழை பெண்களுக்கு புடவைகள் வழங்கினர். அப்பகுதியை சேர்ந்த 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கடமலைபுத்தூர் ஊராட்சியில், ஊராட்சி கிளை செயலாளர் என்.வேலு, மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர் சங்க தொ.மு.ச. அமைப்பு செயலாளர் மு.சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு 200 பேருக்கு உணவு வழங்கினர். இதில், மதுராந்தகம் தெற்கு ஒன்றிய செயலாளர் எண்டத்தூர் ஸ்ரீதரன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சசிகுமார், மாவட்ட பிரதிநிதி கிணார் அரசு மற்றும் நிர்வாகிகள் முத்தையா ராமகிருஷ்ணன், வெங்கடேசன், தனியரசு, பத்மா செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்யூர்: செய்யூர் சட்டமன்ற தொகுதி இலத்தூர் ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் பவுஞ்சூரில் கலைஞரின் 2ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில், காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.புகழேந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டு கலைஞரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து ஏழை எளியவர்களுக்கு அரிசி, காய்கறி மற்றும் அன்னதானம் வழங்கினர். மாவட்ட துணை செயலாளர்கள் வெளிகாட்டு ஏழுமலை, ஊராட்சி கிளை செயலாளர் தணிகாசலம், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் இராமமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 


Tags : memorial day ,artist , Artist's, Memorial Day, Annathanam, Welfare Aids
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...