திருப்போரூர் ஒன்றியத்தில் ஒரே நாளில் 61 பேர் பாதிப்பு: திருப்போரூர் பேரூராட்சியில் 10 பேருக்கு கொரோனா

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய கேளம்பாக்கம், பையனூர், நெல்லிக்குப்பம் ஆகிய கிராமங்களில் தலா 6 பேர் வீதம் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கண்டிகை, ஆலத்தூரில் தலா 7 பேருக்கும், சிறுதாவூர், தண்டலம் கிராமங்களில் தலா 3 பேருக்கும், தையூரில் 2 பேருக்கும், தாழம்பூர், முள்ளிப்பாக்கம், பெருந்தண்டலம், படூர், புதுப்பாக்கம், மாம்பாக்கம், நாவலூர், ஆகிய கிராமங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதியானது. அதேபோன்று நேற்று திருப்போரூர் பேரூராட்சியிலடங்கிய கிரிவலப்பாதை, தெற்கு மாடவீதி, சான்றோர் வீதி, செங்கல்பட்டு சாலை, மடம் தெரு, குமரன் நகர், கண்ணகப்பட்டு பிள்ளையார் கோயில் தெரு ஆகியவற்றில் மட்டும் ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 

Related Stories: