×

அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் பெரியார் நினைவுத்தூண் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். தொழிலாளர் சட்டங்களை முற்றிலுமாக நீக்குவது, நான்கு தொகுப்புகளாக குறைப்பது, வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும், மின்சார திருத்த சட்டத்தை கைவிட வேண்டும், கொரோனா பெயரை சொல்லி கொண்டு பாதுகாப்பு தொழிற்சாலைகள், நிலக்கரி சுரங்கங்கள், விண்வெளி அறிவியல், அணு ஆற்றல், வங்கி, ரயில்வே உள்ளிட்டவற்றை தனியாருக்கு விற்க கூடாது.

வேலைநீக்கம், சம்பள வெட்டு, வேலை நேரத்தை அதிகரிக்கிற முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும். வருங்கால வைப்பு நிதி சந்தாவை 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்க கூடாது, பொது முடக்கத்தால் வருமானம் இழந்த கட்டுமான தொழிலாளர்கள், உடல் உழைப்பு தொழிலாளர்கள், வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருமானம் ஈட்டாத குடும்பத்திற்கு 5 மாதத்திற்கு தலா ரூ.7,500 வீதம் ரூ.37,500 வழங்க வேண்டும், கட்டுமானம் ஆட்டோ மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்கள், பதிவு செய்ய தவறியவர்கள், புதுப்பிக்காதவர்கள் என அனைவருக்கும் ஓய்வூதியர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியும், பொருட்களும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தொழிற்சங்க நிர்வாகிகள் நேரு, சிவா, சாரங்கன், லாரன்ஸ், மதுசூதனன், ஜீவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : trade union federation demonstration , All, trade union federation, demonstration
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை