×

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட பாஜக அமைப்புசாரா தொழிலாளர்கள் நலசங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பொன்னையா நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பாஜக அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாநில துணைத்தலைவர் கணேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காஞ்சி மாவட்ட மேற்பார்வையாளர் மோகன்ராஜா, மாவட்டத் தலைவர் பாபு, மாவட்ட அமைப்புசாரா நலவாரிய பிரவு தலைவர் கோவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் 100 நபர்களுக்கு ஜன்தன் வங்கிக் கணக்கு தொடங்கி அதற்கான பாஸ்புத்தகம் வழங்கப்பட்டது. மேலும். 50 நபர்களுக்கு கொரோனா கால வங்கிக்கடன் திட்டத்தின் மூலம் கடனுதவி, 500 நபர்களுக்கு பிரதம மந்திரியின் ஓய்வூதியப் பயன் திட்டம் என நல உதவிகள் வழங்கப்பட்டது.

Tags : Ceremony , Welfare Aid, Providing, Ceremony
× RELATED இலவச மாற்றுப்பள்ளியில் மாணவர்களுக்கு நுழைவுச்சீட்டு வழங்கும் விழா