×

இந்தி மொழி தெரிந்தால்தான் இந்தியரா? கனிமொழி எம்பி கேள்வி

சென்னை: இந்தி மொழி தெரிந்தால்தான் இந்தியரா என்று கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார். திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இன்று விமான நிலையத்தில், எனக்கு இந்தி தெரியாது. என்னிடம் தமிழிலோ, ஆங்கிலத்திலோ பேசுங்கள் என்று சிஐஎஸ்எப் அதிகாரியிடம் நான் கூறினேன். உடனே அவர் உடனே நீங்கள் இந்தியரா என்று கேள்வி எழுப்பினார். இந்தி தெரிந்திருந்தால் இந்தியர் என்பது எப்போதிலிருந்து ஆனது என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இவ்வாறு பதிவில் கூறப்பட்டிருந்தது. மேலும், இந்த பதிவில் இந்தித் திணிப்பு என்ற ஹேஷ்டேக்கையும் கனிமொழி எம்பி பதிவிட்டிருந்தார். கனிமொழியின் டிவிட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Indian ,Kanimozhi , Hindi language, if you know it, Indian? , Kanimozhi MP, question
× RELATED இந்தி தெரியாததால் வங்கிக் கடன் வழங்க...