×

கர்நாடகத்தில் ஏற்படும் மழை பாதிப்பு குறித்து 2 அமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை எனத் தகவல்..!!

டெல்லி: கர்நாடக மாநிலத்தில் மழை பாதிப்பு குறித்து 2 அமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியானது. கர்நாடகா உள்பட நாடு முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மழை காரணமாக உயிர் சேதம், பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஒவ்வொரு மாநிலங்களின் மழை பாதிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாளை காணொலி காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனையில் மழையால் ஏற்ப்பட்ட சேதம் குறித்தும் கேட்டு அறிகிறார்.

இதனையடுத்து, கர்நாடகத்தில் மழை பாதிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசிக்க வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோக், காவல்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை ஆகிய 2 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் நியமிக்கப்பட்ட 2 அமைச்சர்கள் பிரதமர் மோடியுடன் நாளை காணொலி காட்சி மூலம் நடக்கவிருக்கும் ஆலோசனையில்  கர்நாடகாவில் மழை பாதிப்புகள் குறித்து தெரிவிக்க உள்ளனர்.

மேலும் மழை பாதிப்பால் மாநிலத்தில் இதுவரை எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்த விவரங்களை தெரிவிப்பதுடன் மழை நிவாரண நிதி ஒதுக்கும்படியும்  பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : ministers ,Modi ,consultations ,Karnataka , Karnataka, rain, Prime Minister Modi, consultation, information
× RELATED கடந்த 3 மாதங்களாக இந்தியா - சீனா...