×

பிரதமர் மோடியின் சுயசார்பு திட்டத்தை நிறைவேற்ற அனைவரும் முன்வர வேண்டும்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

டெல்லி: இந்தியாவிலேயே தயாரான பொருட்களையே வாங்க வேண்டும் என மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் என்று வர்த்தர்களை மத்திய வர்த்தக தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கேட்டுக் கொண்டுள்ளார். தேசிய வர்த்தக தினத்தை முன்னிட்டு நடந்த டிஜிட்டல் உரையில் இந்த கோரிக்கையை விடுத்தார். பிரதமர் மோடியின் சுயசார்பு திட்டத்தை நிறைவேற்ற அனைவரும் முன்வர வேண்டும். எதிரி நாடுகளிடமிருந்து தரமற்ற பொருட்களை வாங்கி மக்களை ஏமாற்றும் வர்த்தகர்களை அடையாளம் காட்ட வேண்டும்.

சுயசார்பு திட்டத்தின் கீழ் தரமான உள்நாட்டு பொருட்கள் உற்பத்தி செய்யப்படும். உள்நாட்டு பொருட்கள் விற்பனை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருப்பதுடன் மக்கள் தரமான பொருட்களை குறைந்த விலைக்கு வாங்க முடியும். உள்நாட்டு தயாரிப்பால் இந்தியாவில் வேலை வாய்ப்பு பெருகும். பணப்புழக்கம் அதிகரிப்பதால் மக்களிடம் வாங்கும் திறன் அதிகரிக்கும். ரூ 10 லட்சம் கோடி மதிப்புள்ள வெளிநாட்டு இறக்குமதி பொருட்கள், உள்நாட்டிலேயே தயார் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Piyush Goyal ,Modi , Prime Minister Modi, Self-Government Program, Union Minister, Piyush Goyal
× RELATED ரயில்வே துறையை தனியார் மயமாக்கும்...