×

''நீங்கள் இந்தியரா?'திமுக எம்.பி.,கனிமொழியின் புகார் - விசாரணை நடத்த சிஐஎஸ்எஃப் உத்தரவு..!!

டெல்லி: சென்னை விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் போலீசார் என்னை இந்தியரா என கேட்டதாக திமுக எம்.பி.,கனிமொழி ட்விட்டரில் புகார் தெரிவித்த நிலையில் சிஐஎஸ்எஃப் அதிகாரியை விசாரணை நடத்த சிஐஎஸ்எஃப் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் தற்போது கொண்டு வரப்பட்ட புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கைக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

இந்த நிலையில், இன்று விமான நிலையத்தில் இருந்த சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவரிடம், இந்தி தெரியாததால் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் என்னிடம் பேசும்படி அறிவுறுத்தினேன். அதற்கு அவர் என்னை நீங்கள் இந்தியரா? என்று வினவினார். இந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை உருவானது எப்போது என்று  டுவிட்டர் பதிவில் அவர் கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்தார்.

இதனையடுத்து, இந்நிலையில் திமுக எம்.பி.,கனிமொழி புகார் தொடர்பாக சிஐஎஸ்எஃப் அதிகாரியை விசாரணை நடத்த சிஐஎஸ்எஃப் உத்தரவிட்டுள்ளது. விமான நிலையத்தில் யாரிடமும் மொழி தொடர்பாக கேட்பதுமில்லை எனவும், சிஐஎஸ்எஃப்  தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சிஐஎஸ்எஃப் அவரது பயண விவரங்களை விசாரணைக்காக கேட்டுக் கொண்டுள்ளது.


Tags : Indian ,DMK ,CISF ,Kanimozhi , DMK, Kanimozhi, Complaint, Inquiry, CISF, Order
× RELATED இந்திய தேர்தல்கள் குறித்து அறிந்த தகவலும்… அறியாத வரலாறும்…