×

கொங்கராயகுறிச்சி தாமிரபரணி ஆற்றோரத்தில் இடிந்துகிடக்கும் தடுப்பு சுவரால் ஊருக்குள் வெள்ளம் புகும் அபாயம்

செய்துங்கநல்லூர்: கொங்கராயகுறிச்சி தாமிரபரணி ஆற்றோரத்தில் இடிந்துகிடக்கும் தடுப்புச் சுவரால் ஊருக்குள் வெள்ளம் புகும் அபாயம் நிலவுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். செய்துங்கநல்லூர் அருகே தாமிரபரணி ஆற்றுப்படுகையில் கொங்கராயகுறிச்சி கிராமம் உள்ளது. பருவமழையின் போது வெள்ளம் வந்தால் கொங்கராயகுறிச்சி புதுமனை இந்திரா நகர் வழியாக அவ்வப்போது வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து விடும் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர், இதனை தடுக்க பஞ்சாயத்து சார்பாக ஆற்றோரத்தில் தடுப்பு சுவர் ஒன்று கட்டப்பட்டது, அதுபோல பொதுப்பணித்துறை சார்பாகவும் ஒரு தடுப்பு சுவர் கட்டப்பட்டு இருக்கிறது,

இதனால் வெள்ள நீர் வரும்பொழுது ஊருக்குள் தண்ணீர் போகாமல் தடுக்கப்பட்டன. கட்டப்பட்ட தடுப்புச்சுவர் நீர் அரிப்பினால் 40 அடி நீளத்திற்கு இடிந்து கிடக்கிறது, எனவே அடுத்து மழைக்காலம் தொடங்குவதற்கு ஓரிரு மாதங்களே இருக்கும் நிலையில் வெள்ள நீர் ஊருக்குள் புகும் அபாயம் நிலவுவதாக ஊர் மக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதைத் தடுத்துநிறுத்த பொதுப்பணித்துறை மற்றும் பஞ்சாயத்து அதிகாரிகள் உடனடியாக தடுப்புச் சுவரை மீண்டும் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : river ,flooding ,Kongarayakurichi Tamiraparani ,city , Kongarayakurichi, barrier wall, risk of flooding
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை