×

நியூசிலாந்தில் கடந்த 100 நாட்களாக நாட்டு மக்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை: அந்நாட்டு அரசு அறிவிப்பு..!!

வெலிங்டன்: நியூசிலாந்து நாட்டில் கடந்த 100 நாட்களாக நாட்டு மக்கள் யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகவில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ள நிலையில், வலுவான சுகாதார கட்டமைப்பு உள்ள நாடுகள் கூட தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன.

இந்த நிலையில், நியூசிலாந்து நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்றை முழுவதுமாக கட்டுப்படுத்தியதால் நியூசிலாந்து படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து அந்நாட்டிற்கு வருபவர்கள் சிலருக்கு தொற்று உறுதியாகிறது. ஆனால் அவர்கள் அனைவரும் முறையாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

நியூசிலாந்தில் தற்போது 23 பேர் மட்டுமே கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்கள் அனைவரும் நாட்டிற்குள் நுழையும் போது பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் நியூசிலாந்தில் கடந்த 100 நாட்களாக உள்ளூர் மக்கள் யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை என அரசு அறிவித்துள்ளது. ஆனால் சுகாதார நடவடிக்கைகளை மக்கள் கைவிடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளது.

Tags : New Zealand ,government , New Zealand, Corona
× RELATED கொரோனாவுக்கு உலக அளவில் 9,50,132 பேர் பலி