டெல்லியில் குறையும் கொரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் 1300 பேருக்கு தொற்று உறுதி: சுகாதாரத்துறை தகவல்..!!

டெல்லி: டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருவதற்கு  கெஜ்ரிவால் தான் வெற்றிக்கு காரணம் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்து வருகிறது. எனினும், டெல்லி அரசின் கையில் இருந்து வெளியேறிய பின்னர் கொரோனா வைரஸ் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக பாஜக கூறி வருகிறது.

டெல்லியின் சில பகுதிகள் தான் உச்சத்தை எட்டியதாக தெரிகிறது. பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்ததால் அவ்வாறு தெரிகிறது. எனினும், இன்னும் சில பகுதிகள் உச்சத்தை எட்டவில்லை. சில மாநிலங்களில் தொடர்ந்து, பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டெல்லியில் முதலில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாடகளாக கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்தே வருகிறது.

இந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மேலும் 1,300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,45,427 ஆக அதிகரித்துள்ளது. மேலும் டெல்லியில் இன்று 13 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,111 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,30,587 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் தற்போது 10,729 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: