×

இந்தி மொழி தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை மாறியது எப்போது?: திமுக எம்.பி. கனிமொழி கேள்வி

சென்னை: இந்தி மொழி தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை மாறியது எப்போது என திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். விமான நிலையத்தில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசும்படி கூறியபோது நீங்கள் இந்தியர் தானா என சி.ஐ.எஸ்.எஃப். அதிகாரி ஒருவர் கேள்வி கேட்டார் என திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். திமுக எம்.பி கனிமொழி டெல்லி செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை விமான நிலையம் சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த சி.ஐ.எஸ்.எஃப் பெண் அதிகாரி ஒருவர், இந்தி மொழியில் எதோ கேட்டுள்ளார். அதற்கு கனிமொழி, எனக்கு இந்தி தெரியாது, தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுங்கள் என கூறியுள்ளார். அதற்கு பதில் அளித்த அந்த பெண் அதிகாரி, இந்தி தெரியவில்லையா, நீங்கள் ஒரு இந்தியனா என கேள்வி கேட்டுள்ளார். தொடர்ந்து கனிமொழி,  இந்தி தெரிந்தால் தான் இந்தியர் என சட்ட திருந்தம் எப்போது கொண்டுவரப்பட்டது என அந்த பெண் அதிகாரியிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், தனது பயணத்தைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இந்த சம்பவம் தொடர்பாக ட்விட்டரில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் இந்தியராக இருப்பது என்பது இந்தி தெரிந்திருப்பதற்கு இணையாகதாக மாறியது எப்போது என கேள்வி எழுப்பியிருக்கிறார். சமீப நாட்களாக இந்தி மொழி கற்பது தொடர்பான சர்ச்சை எழுந்து வரும் நிலையில், திமுக எம்பி கனிமொழியிடம் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags : Kanimozhi ,DMK ,Indian , Hindi Language, Indian, DMK, MP Kanimozhi
× RELATED பாஜ, அதிமுக ஸ்டிக்கர் கட்சிகள்...