சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் நிறைபுத்தரிசி பூஜை!: அறுவடை செய்யப்பட்ட புது நெற்கதிர்கள் ஐய்யப்பனுக்கு படையல்..!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் நிறைபுத்தரிசி பூஜை நடைபெற்றது. அறுவடை செய்யப்பட்ட புது நெற்கதிர்கள் ஐய்யப்பனுக்கு படைக்கப்பட்டன. பாரம்பரியமாக நடைபெறக்கூடிய இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு வழிபாடு நடத்துவார்கள். ஆனால் தற்போது கொரோனா நோய் தொற்று வேகமாக பரவுவதன் காரணமாக பக்தர்கள் கோவில்களில் வழிபாடு  செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் சிறப்பு பூஜையில் பக்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இதையடுத்து, அதிகாலை 4 மணிக்கு சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் நடத்தப்பட்டது.

இதை தொடர்ந்து புது நெல் கதிர்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு அங்கிருந்த கோவில் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் ஐய்யப்பனுக்கு நிறைபுத்தரிசி பூஜை நடைபெறும். இந்த பூஜையில் பல்வேறு இடங்களில் இருந்து வயல்களில் விளைந்த புது நெற்கதிர்களை கொண்டு வந்து கொடுத்து ஐய்யப்பனுக்கு படையலிட்டு வழிபாடு நடத்தி அதனை பக்தர்களுக்கு கோவிலிலிருந்து வழங்குவது வழக்கம். அந்த நெற்கதிர்களை தங்களுடைய வீடுகளுக்கு எடுத்து சென்று வைப்பதன் மூலம், விவசாயம் செழித்து மக்கள் வளமுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. இதன் அடிப்படையிலேயே தற்போது நடப்பாண்டிலும் நிறைபுத்தரிசி பூஜை நடைபெற்றது.

Related Stories: