×

சென்னை மணலியில் உள்ள 202 டன் அமோனியம் நைட்ரேட்டை தமிழத்தத்திலிருந்து முதற்கட்டமாக ஐதராபாத்திற்கு இடமாற்றம்!!!

சென்னை: சென்னை மணலி கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 740 டன் அமோனியம் நைட்ரேட்டில் சுமார் 202 டன் இணையதள ஏலம் மூலமாக முதற்கட்டமாக ஐதராபாத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் லெபனானில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் திடீரென வெடித்து சிதறியதால் நூற்றுக்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்திய துறைமுகங்களில் இதுபோன்ற வெடிபொருள்கள் இருந்தால் அதன் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் சென்னை மணலி பகுதியில் சுமார் 740 டன் அமோனியம் நைட்ரேட் பறிமுதல் செய்யப்பட்டு பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியானது.  இதனையடுத்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரிதும் பீதியடைந்திருந்தனர்.  இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட்டை கடந்த 4 நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அதனை அப்புறப்படுத்தவும் அரசு, சுங்க துறை ஆணையருக்கு உத்தரவிட்டது.

பின்னர் இணையதள வழியாக ஏலம் விடும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் தற்போது 37 கன்டெய்னர்களில் இருக்கும் 740 அமோனியம் நைட்ரேட்டை ஐதராபாத்தை சேர்ந்த சால்வோ நிறுவனம் பெற்று கொள்ளவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முதற்கட்டமாக சுமார் 10 கன்டெய்னர்களில் 202 அமோனியம் நைட்ரேட்டை ஐதராபாத் நிறுவனத்திற்கு தமிழகத்திலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பாதுகாப்பான முறையில் அதிகாரிகளின் கண் முன்னே ஐதராபாத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள சுமார் 540 டன் அமோனியம் நைட்ரேட்டானது தொடர்ந்து மணலியில் உள்ள வேத்திக்கிடங்கில்தான் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டத்தில் இங்கு 740 டன் அமோனியம் நைட்ரேட் உள்ளதாக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். ஆனால் ஏலம் விடப்படும்போது 697 டன் மட்டுமே கூறியுள்ளனர். எனவே சுங்கத்துறை முன்னுக்குப்பின் முரணாக தெரிவித்துள்ள அறிக்கையில் மீதமுள்ள 43 டன் அமோனியம் நைட்ரேட் எங்கே? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் சுங்கத்துறை அதிகாரிகள் மாயமான 43 டன் அமோனியம் நைட்ரேட் குறித்து எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. தற்போது அதிலிருந்து சுமார் 202 டன் மட்டுமே ஐதராபாத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.Tags : time ,Chennai ,Hyderabad ,Tamil Nadu , Chennai, Sand, Ammonium Nitrate, Hyderabad
× RELATED வரலாற்றில் முதல்முறையாக சுவாமி...