×

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அரசுக்கு எதிராக தொடர் வன்முறை!: போராட்டத்தை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு..!!

லெபனான்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருவதால், போராட்டத்தை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்யக்கோரி பொதுமக்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றனர். மேலும் பலர் நிதி உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களை முற்றுகையிட்டனர்.

போராட்டக்காரர்களை கலைக்க முதலில் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. பின்னர் நிலைமை கட்டுப்படுத்த துப்பாக்கிசூடும் நடத்தப்பட்டது. போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் 730 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். 158 பேரை பலி வாங்கிய குண்டு வெடிப்பால் துறைமுகம் அருகே 141 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால் நாடாளுமன்றத்தை களைத்து திடீர் தேர்தல் நடத்தப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ஹஸத் கூறியுள்ளார்.

இந்த போராட்டத்தில் போராட்டக்காரர்கள் பிரதமர் உருவ பொம்மைக்கு தீவைத்து எரித்தனர். முன்னதாக பெய்ரூட் துறைமுகத்தில் நேரிட்ட பயங்கர வெடிவிபத்துக்கு அதிகாரிகளின் ஊழல் மற்றும் அலட்சியப் போக்கே காரணம் என கூறி அரசு அலுவலகங்கள் மீது பொதுமக்கள் கற்களை வீசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Beirut ,government ,Lebanese ,protest , Lebanon, Beirut, violence, smoke bombs
× RELATED லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வணிக...