×

ஜனநாயகக் கட்சி வரிச்சலுகையை எதிர்க்கவில்லை: தவறான தகவல்களை கூறுவதாக அதிபர் டிரம்ப் மீது குற்றச்சாட்டு..!!

வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூஜெர்ஸி கோல்ப் கிளப்பில் கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்துகொண்டு பேசினார். அமெரிக்காவில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கதைக் கட்டுப்படுத்த இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அப்போது எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிமீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதாக எதிர்ப்பாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா காலத்தில் அமெரிக்கர்களுக்கு அளிக்கப்படும் நிதி உதவியில் வரி நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனை அடுத்து அதற்கான வரி நீக்கப்பட்டது. இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது இதனை ஜனநாயக கட்சி எதிர்த்தது எனக் கூறியுள்ளார். இது தவறான தகவல் என்றும் ஜனநாயகக்கட்சி வரிச்சலுகையை எதிர்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா தாக்கம் காரணமாக வேலை இழந்த அமெரிக்க குடிமக்களுக்கு 400 டாலர் உதவித்தொகையை வழங்கும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார். இதுதொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் ஜனநாயக கட்சியும் குடியரசு கட்சியும் இணைந்து ஒரு முடிவை எட்டவில்லை. இந்த உதவித் தொகையில் 25 சதவீதத்தை அமெரிக்க மாநில அரசுகள் ஏற்கும். 75 சதவீதத்தை மத்திய அரசு ஏற்கும் என மாநில கவர்னர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Tags : Trump ,Democrats , Democrats, President Trump, indictment
× RELATED பாலியல் தொல்லை செய்த அமெரிக்க அதிபர்...